உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆவின் அருகே சாலையில் குழி வாகனங்கள் இயக்குவதில் சிரமம்

ஆவின் அருகே சாலையில் குழி வாகனங்கள் இயக்குவதில் சிரமம்

ஊட்டி;ஊட்டி ஆவின் அருகே சாலையில் குழி ஏற்பட்டு, தண்ணீர் ஓடுவதால், வாகனங்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்த தேசிய நெடுஞ்சாலையில், ஊட்டியில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தவிர, கட்டுமான பாரம் ஏற்றிவரும் கனரக வாகனங்கள் இச்சாலையில் அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றன.போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் ஆவின் அருகே, பெரியளவில் குழிகள் ஏற்பட்டுள்ளன. தவிர, செங்குத்தான பகுதியில் இருந்து வரும் தண்ணீர் சாலையின் மேல் ஓடுகிறது. குழிகளில் குளம் போல் தண்ணீர் நிறைந்துள்ளதால், வாகனங்கள் சென்று வர சிக்கல் நீடிக்கிறது.எதிரில் வரும் வாகனங்கள் ஒதுக்குவதில் இடையூறு ஏற்படுகிறது. மேலும், மக்கள் நடந்து செல்லும் போது, வாகனங்களால் தண்ணீர் தெறிப்பதால், பாதிப்பு அதிகரித்துள்ளது.எனவே, குழியை சீரமைத்து, வாகனங்கள் இடையூறின்றி சென்றுவர, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை