உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மேட்டுப்பாளையம் வரும் டில்லி கேரட்: விவசாயிகள் கவலை

மேட்டுப்பாளையம் வரும் டில்லி கேரட்: விவசாயிகள் கவலை

குன்னுார்:'டில்லி கேரட் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு கொண்டு வரப்படுவதால், ஊட்டி கேரட் விலை பாதிக்கப்படும்,' என, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் முக்கிய விவசாயங்களில் ஒன்றான கேரட் விவசாயம் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு விளையும் கேரட் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு கொண்டு சென்று ஏலம் விடப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.இந்நிலையில், தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு டில்லி கேரட் கொண்டு வரப்படுவதால் நீலகிரி விவசாயிகள் பாதிப்பதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி விவசாயிகள் நல சங்க தலைவர் விஸ்வநாதன் கூறுகையில், ''கடந்த ஆண்டு மேட்டுப்பாளையத்தில் சில மண்டி வியாபாரிகள் டெல்லியில் இருந்து கேரட்டை கொண்டு வந்து ஊட்டி கேரட் என விற்பனை செய்து வந்தனர்.இதனால், ஊட்டி கேரட் விலை மிகவும் சரிந்தது. நீலகிரி விவசாய சங்கத்தினர் மேட்டுப்பாளையம் மண்டி வியாபாரிகளிடம் நடத்திய பேச்சு வார்த்தையின் பயனாக டில்லி கேரட் வரத்து நிறுத்தப்பட்டது.பிறகு டில்லி கேரட் மதுரைக்கு கொண்டு சென்றதால் கொடைக்கானல் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஒன்று திரண்ட விவசாயிகள் டில்லி கேரட்டை மதுரைக்கு கொண்டு வராமல் தடுத்தனர். இதனால் தற்போது மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு டில்லி கேரட் கொண்டு வரப்படுகிறது. எனவே இதற்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ