மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
17 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
18 hour(s) ago
அன்னுார் : மானிய விலையில் பருத்தி விதை வழங்கப்படுகிறது, என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அன்னுார் வட்டாரத்தில், தற்போது கோடை மழையை ஒட்டி பருத்தி நடவு துவங்கியுள்ளது. அல்லப் பாளையம், பசூர், கஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி பயிரிட துவங்கியுள்ளனர். இதையடுத்து அன்னுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தற்போது பருத்தி நடவு சீசன் தொடங்கியுள்ளதால் சுரபி பருத்தி விதை மானியத்தில் வழங்கப்படுகிறது. பருத்தி பயிர் செய்யும் விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம். விதையின் முழு விலை 435 ரூபாய். இதற்கு, 140 ரூபாய் அரசு மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் ஒரு கிலோவிற்கு, 295 ரூபாய் மட்டும் செலுத்தி பருத்தி விதைகளை வாங்கி பயன் பெறலாம்,' என தெரிவித்துள்ளனர்.
17 hour(s) ago
18 hour(s) ago