உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போதை பொருள் விழிப்புணர்வு; மாணவர்களுக்கு அறிவுரை

போதை பொருள் விழிப்புணர்வு; மாணவர்களுக்கு அறிவுரை

பந்தலுார் : பந்தலுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, தேவாலா காவல்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சூரியகுமார் வரவேற்றார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், கலையரசி, ரவிச்சந்திரன் ஆகியோர், 'போதை பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள்; போதை பொருள் வைத்திருந்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள்,' குறித்து பேசினர். தொடர்ந்து, விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளியில் துவங்கி, பந்தலுார் பஜார் வழியாக சென்று பள்ளி வளாகத்தை வந்து அடைந்தது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் செந்தில்குமார், நந்தகுமார், தண்டபாணி மற்றும் மாணவர்கள் போலீசார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை