உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடியிருப்புகள் அருகே குட்டிகளுடன் முகாமிட்ட யானைகள்

குடியிருப்புகள் அருகே குட்டிகளுடன் முகாமிட்ட யானைகள்

பந்தலுார்:பந்தலுார் அருகே காவயல் பகுதியில் குடியிருப்புகளை ஒட்டி குட்டிகளுடன் முகாமிட்ட யானைகளால் மக்கள் அச்சமடைந்தனர்.பந்தலுார் அருகே மழவன் சேரம்பாடியில் இருந்து கையுன்னி செல்லும் சாலையில் காவயல் பகுதியில் நேற்று முன்தினம் பகல் நான்கு குட்டிகளுடன், 8 யானைகள் முகாமிட்டது. இந்த பகுதியில் யானைகள் தண்ணீர் பருக ஏதுவாக சிறிய தடுப்பணைகள் மற்றும், தீவனங்களும் உள்ளதால் இப்பகுதியில் முகாமிட்டன. குடியிருப்புகள் மற்றும் சாலையை ஒட்டி யானைகள் முகாமிட்டதால், இப்பகுதி மக்களும் சாலையில் நடந்து செல்வோரும் அச்சம் அடைந்தனர். வனத்துறையினர் கூறுகையில், 'வனப்பகுதி முழுமையாக காட்டுத்தீயில் நாசம் அடைந்த நிலையில், இது போன்ற சதுப்பு நில பகுதிகளில் யானைகளுக்கு உணவு கிடைப்பதால், இதே பகுதியில் தொடர்ச்சியாக முகாமிடும். பொதுமக்கள் பகல் நேரங்களில் நடந்து செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும்,' என்றனர். மேலும், இந்த பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை வனக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை