உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி நாய்கள் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம்

ஊட்டி நாய்கள் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம்

ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில், நடப்பாண்டின், 134, 135வது நாய்கள் கண்காட்சி, இரண்டாம் நாளாக நடந்தது.அதில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், 'ஜெர்மன் செப்பர்டு, கோல்டன் ரிட்ரீவர், இங்லீஷ் காக்கஸ் ஸ்பேனியல், பெல்ஜியம் மெலோனஸ், கன்னி, சில்கி டெரியர், பாக்சர், மினியேச்சர் பின்ச், கேரவன் பசுமி, டாபர்மேன், சைபீரியன் ஆஸ்கி, பிகில், பெல்ஜியம் செப்பர்டு மற்றும் தமிழகத்தை சேர்ந்த ராஜபாளையம், கோம்பை மற்றும் சிப்பி பாறை நாய்கள்,' என, பல்வேறு வகைகளில், 435 நாய்கள் பங்கேற்றன.மேலும், 'சிப்பர்க்கி, ரொப்பேசியன் ரிட்ஜிட்பேக், போசம் அவுண்ட், பர்னிஷ் மவுண்டன், பாசஞ்சி, சிப்பா, இங்லீஷ் பாய்ன்டர், பிகான் பிரிஷி, கேவானியர் கிங் சார்ல்ஸ், டேசண்ட் மற்றும் டாய் பூடுல்,' என, நாய்களும் இம்முறை வந்துள்ளன. முதல் நாளான நேற்று முன்தினம், நாய்களுக்கான கீழ்படிதல் போட்டி நடந்தது. நேற்று அனைத்து வகை நாய்கள் பங்கேற்ற கண்காட்சி மற்றும் போட்டிகள் நடந்தது.அதில், டேசண்ட், பெல்ஜியம் மெலோனஸ் ஆகிய நாய்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை கவர்ந்தது. அதில், வெற்றி பெற்ற நாய்களுக்கும், இன்று(12ம் தேதி) நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் நாய்களுக்கும், இறுதி கட்ட போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை