| ADDED : ஜூலை 09, 2024 01:35 AM
கூடலுார்;கூடலுார் நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில் செயல்பாடுகள் குறித்து, கேரளா வனச்சர்கள் கள பயிற்சி அளித்தனர்.கேரள மாநிலத்தில், பதவி உயர்வு பெற்ற வனச்சரங்களுக்கு, வாளையார் மாநில வன பயிற்சி மையத்தில், மூன்று மாத பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பயிற்சி மையத்தின் துணை இயக்குனர் சணல் தலைமையில், பயிற்றுனர்கள் சமீர், பெண்ணி மற்றும் 15 பயிற்சி வனச்சரகர்கள் முதுமலை புலிகள் காப்பகம், கூடலுார் வன கோட்டத்தில், இரண்டு நாள் கள பயிற்சி மேற்கொண்டனர்.தொடர்ந்து, முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில், வளர்ப்பு யானைகள் பராமரிப்பு, பாகன்கள் பணி குறித்தும், வனப்பகுதியை ஆக்கிரமித்து வரும் உண்ணி செடிகளை அகற்றுவது குறித்து செயல்விளக்க பயிற்சி அளித்தனர்.மேலும், கூடலுார் நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தின் பராமரிப்பு, சுற்றுலா பணிகள் குறித்து வனச்சரகர் வீரமணி செயல் விளக்க பயிற்சி அளித்தார்.வனச்சரகர்கள் கூறுகையில்,'முதுமலை, கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தின் முகாம் பயனுள்ளதாக இருந்தது,' என்றனர்.