உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குப்பைக்கு தீவைப்பு பொதுமக்கள் தவிப்பு

குப்பைக்கு தீவைப்பு பொதுமக்கள் தவிப்பு

அன்னுார்: அன்னுாரில் குப்பைக்கு தீ வைப்பதால், மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அன்னுாரில் மேட்டுப்பாளையம் சாலையில், மின் மயானத்துடன் பேரூராட்சி எல்லை முடிவடைகிறது. அங்கு ஒட்டர் பாளையம் ஊராட்சி எல்லை துவங்குகிறது. இங்கு குளத்துக்கு மழை நீர் வரும் பெரிய பாலம் உள்ளது. டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது.இப்பகுதியில் சிலர் குப்பைகளை மூட்டை. மூட்டையாக கொண்டு வந்து கொட்டுகின்றனர். மலைபோல் குவிந்துள்ள இந்த குப்பைக்கு சிலர் தீ வைத்து விடுகின்றனர்.இது குறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில்,' டிரான்ஸ்பார்மர் அருகே குப்பை எரிவதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மின் மயானம், கருப்பராயன் கோவில் மற்றும் ஒட்டர்பாளையம் செல்லும் பொது மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மிகுந்த சிரமப்படுகின்றனர்.இதுகுறித்து அன்னுார் பேரூராட்சியிலும், ஒட்டர் பாளையம் ஊராட்சியிலும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. உடனடியாக இங்கு குப்பை கொட்டுவதை தடை செய்ய வேண்டும். குப்பைகளை அகற்ற வேண்டும். குப்பைக்கு தீவைப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ