மேலும் செய்திகள்
அணைகள் நீர்மட்டம்
1 hour(s) ago
புகையிலை இல்லா இளைய சமுதாய விழிப்புணர்வு பேரணி
2 hour(s) ago
சூலூர்:சமுதாய நலக்கூடம் கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில், மனைப்பிரிவுகளுக்கு ஒப்புதல் அளித்த, மாவட்ட நகர ஊரமைப்பு இணை இயக்குனரின் உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. கோவை மாவட்டம், வெள்ளானைப்பட்டி கிராமத்தில் 'கோவை போலீஸ் என்கிளேவ்' என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. 17.55 ஏக்கர் பரப்பில், 289 மனைகள் இங்கு உள்ளன. நான்கு இடங்களில் பூங்கா அமைக்கவும், ஒரு இடத்தில் சமுதாய நலக்கூடம் கட்டவும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சமுதாய நலக்கூடம் கட்ட ஒதுக்கப்பட்ட, இடத்தை மனைப்பிரிவுகளாக மாற்ற, லே - அவுட் உரிமையாளர், உள்ளூர் திட்ட குழுமத்திடம் விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து, சமுதாய நலக்கூடத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை, குடியிருப்பு மனையாக மாற்றம் செய்ய, நகர ஊரமைப்பு இணை இயக்குநர் ஒப்புதல் அளித்தார். அந்த உத்தரவை ரத்து செய்ய கோரி, கோவை போலீஸ் என்கிளேவ் குடியிருப்போர் மற்றும் மனை உரிமையாளர்கள் சங்கத்தினர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, சமுதாய நலக்கூடம் கட்ட ஒதுக்கப்பட்ட 2 ஆயிரத்து, 975 ச.மீ., இடத்தை மனை பிரிவுகளாக மாற்ற ஒப்புதல் அளித்த நகர ஊரமைப்பு இணை இயக்குநர் உத்தரவுக்கு, கடந்த 4ம் தேதி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
1 hour(s) ago
2 hour(s) ago