மேலும் செய்திகள்
அணைகள் நீர்மட்டம்
3 hour(s) ago
புகையிலை இல்லா இளைய சமுதாய விழிப்புணர்வு பேரணி
3 hour(s) ago
ஊட்டி : 'தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்தால் அமைதி பள்ளத்தாக்கு அமைதியாக நிலைத்திருக்கும்,' என, மழைக்காடுகள் தின நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.ஊட்டி எமரால்டு அரசு மேல்நிலை பள்ளியில், தேசிய பசுமை படை சார்பில், சர்வதேச மழைக்காடுகள் தினத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் விஸ்வநாதன் பேசுகையில், ''மழைக்காடுகள் தினம், கூட்டமைப்பினால், 2017ம் ஆண்டு துவக்கப்பட்டு ஜூன், 22ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. மாணவர்கள் மழைக்காடுகள் பூமியில் நிலை நிறுத்த வேண்டிய அவசியம் குறித்து அறிந்து பாதுகாக்கும் நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம்,'' என்றார். நீலகிரி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் சிறப்பு கருத்தாளராக பங்கேற்று பேசியதாவது:நிலப்பரப்பில் ஆறு சதவீதம் மட்டுமே மழைக்காடுகள் பூமியின் நுரையீரல் போன்று செயல்படுவது குறிப்பிடத்தக்கது. உலகின் பாதி அளவு தாவரங்கள், விலங்கினங்கள் வாழ்வதற்கான பகுதியாக உள்ளது. இந்தியாவின் அமைதி பள்ளத்தாக்கு, 34.52 சதுர கி.மீ., பகுதி கேரளாவில் மன்னார்காடு பகுதியில் உள்ளது. இதனை வளமையாக நிலை நிறுத்த நிலம்பூர் காடுகளும், தென்னிந்தியாவின் ஐந்தாவது மிக உயரமான மலைத்தொடர் முக்கூர்த்தியும் இதற்கு பாதுகாப்பாக உள்ளன.தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்தால் அமைதி பள்ளத்தாக்கு அமைதியாக நிலைத்திருக்கும். இந்த பிராந்தியத்தில் முக்ககூர்த்தி அமைதி பள்ளத்தாக்கில் பல அழிந்து வரும் தாவர இனங்கள், விலங்கினங்கள் பாதுகாப்புடன் இருக்க, தென் மேற்கு பருவமழை மிக அவசியமாக உள்ளது. குறிப்பாக, நீலகிரி வரையாடு முக்கூர்த்தி பகுதியில் பாதுகாக்கப்படுகிறது. அமைதி பள்ளத்தாக்கில் திருவாங்கூர் ஆமைகள், இந்திய ஹாண்ட் பில், சிங்கவால் குரங்கு, ராஜநாகம், போன்ற அழிவின் பட்டியலில் இருக்கும் உயிரினங்கள் பாதுகாக்கப்படுகிறது. தென்மேற்கு பருவ மழை மேற்கு தொடர்ச்சி மலையின் வளமைக்கும், மழை காடுகளின் பாதுகாப்பிற்கும் மிக அவசியமாக உள்ளது. இந்தப் பகுதியில் வன சுரண்டல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் அதிக அழுத்தம் தருவதால், இதன் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். இதில், இயற்கை ஆர்வலர் கங்காதரராஜ், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago