உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் மீண்டும் ஆற்றோர ஆக்கிரமிப்பு மின் கம்பத்தை சேர்த்து அமைத்த புதிய கடைகள்

குன்னுாரில் மீண்டும் ஆற்றோர ஆக்கிரமிப்பு மின் கம்பத்தை சேர்த்து அமைத்த புதிய கடைகள்

குன்னுார் : குன்னுார் டி.டி.கே., சாலையில் ஆற்றோர ஆக்கிரமிப்பு அகற்ற ஐகோர்ட் உத்தரவை முழுமையாக செயல்படுத்தாத நிலையில், நாள்தோறும் புதிதாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.குன்னுார் ஆற்றோர பகுதிகளில், ஆக்கிரமிப்பு செய்த, 73 கடைகளை இடிக்க, 2019ல் ஐகோர்ட் உத்தரவிட்டது. அதில், 'டி.டி.கே., சாலை, ஆட்டோ ஸ்டாண்ட் எதிர்புறம், பஸ் ஸ்டாண்ட்,' என, சுற்றுப்புற பகுதிகளில் உள்ள, 55 கடைகளை மட்டும் இடிக்க 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு, 44 கடைகள் மட்டும் அகற்றப்பட்டன. இந்நிலையில், சமீபத்தில் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் மழையின் காரணமாக, டீக்கடையின் ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால், 7 கடைகள் காலி செய்ய நோட்டீஸ் வழங்கியதால் காலி செய்தனர்.அதே நேரத்தில், டி.டி.கே., சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் முழுமையாக அகற்றப்படாத நிலையில், மீண்டும் புதிதாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அதில், மின் கம்பத்திலேயே கடையின் ஒரு பகுதியை சேர்த்து கட்டி வைத்து, இரவு நேர கடைகள் செயல்படுகிறது. இங்கு வருபவர்கள் மின் அபாயத்தில் சிக்கும் சூழ்நிலை இருந்தும், இவ்வழியாக செல்லும் அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இது போன்ற ஆபத்து மிகுந்த கடைகள் அமைப்பதற்கு ஆளும் கட்சியினர் சிலர் உடந்தையாக உள்ளனர்.மக்கள் கூறுகையில்,'இந்த பகுதிகளை வருவாய் துறையினர் ஆய்வு செய்து, அனைத்து அக்கிரமிப்பு கடைகளையும் அகற்றுவதுடன், புதிதாக ஏற்படுத்திய கடைகளை அகற்றி, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அசம்பாவிதம் நடந்த பின் அகற்றி பயனில்லை,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ