உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போலீஸ் கஞ்சா விற்ற விவகாரம் இன்ஸ்பெக்டர் மகன், 2 பேர் கைது

போலீஸ் கஞ்சா விற்ற விவகாரம் இன்ஸ்பெக்டர் மகன், 2 பேர் கைது

ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பட்டாலியன் பிரிவு போலீஸ்காரர் சவுந்தர்ராஜ்,29, கைது செய்யப்பட்டார்.விசாரணையில், 'சவுந்தர்ராஜ் பல வருடங்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், இவரின் குற்ற செயலுக்கு சில போலீஸ்காரர்கள் உடந்தையாக இருந்தனர்' என்பது தெரிய வந்தது.தொடர்ந்து, நீலகிரி மாவட்ட எஸ்.பி., சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில், ஊட்டி டவுன் டி.எஸ்.பி., யசோதா மேற்பார்வையில், ஊட்டி ஜி1 போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாபிரியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், போலீஸ்காரர் சவுந்தரராஜுடன் சேர்ந்து, மதுரையை சேர்ந்த கோகுல், 30, தேனி மாவட்டத்தை சேர்ந்த கல்கிசுந்தரம், 28, செல்வமுருகன், 35, ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.மூவரையும் போலீசார் கைது செய்தனர்.இவர்கள், தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த பாண்டிசெல்வம் என்ற மொத்த வியாபாரியுடன் சேர்ந்து, பல இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது.அதில், கோகுல் என்பவர், மதுரை சி.பி.ஐ., பிரிவில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் ஆவார். பட்டப்படிப்பு முடித்துள்ள கல்கி சுந்தரம் விவசாயமும், செல்வமுருகன் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராகவும் பணியாற்றி வந்தனர்.'இவர்கள் குறுகிய காலத்தில் பல லட்சம் ரூபாய் கஞ்சா விற்பனையில் வருமானம் பார்த்துள்ளனர்' என்பது, விசாரணையில் தெரிந்தது.இவர்களுடன் தொடர்பில் உள்ள பலரையும் விசாரணை வளைத்துக்குள் தனிப்படை போலீசார் கொண்டு வந்துள்ளனர். இதனால், சங்கிலி தொடராக விரைவில் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை