மாநில விளையாட்டு விடுதிகளில் சேர அழைப்பு
ஊட்டி:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2024--25 ஆண்டிற்கான விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான தேர்வுகள் நடத்தப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:விடுதிகளில் சேருவதற்கு விருப்பம் உள்ளவர்கள், தடகளம், குத்துச்சண்டை, மேசைப்பந்து (6,7 மற்றும் 8ம் வகுப்பு (ஆண், பெண்); டேக்வாண்ேடா, பளு துாக்குதல் (ஆண் மட்டும்), இறகு பந்து (ஆண், பெண்), வில்வித்தை (ஆண் மட்டும்) சென்னை நேரு பூங்கா விளையாட்டு அரங்கில், 7ம் தேதி ஆஜராக வேண்டும்.ஜிம்னாஸ்டிக் மற்றும் நீச்சல் (ஆண், பெண்) சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்திலும், டென்னிஸ் (ஆண், பெண்) நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கிலும், சைக்கிளிங் செங்கல்பட்டு மேல கோட்டையூர் வளாகத்திலும், வரும், 7ம் தேதி, காலை, 7:00 மணிக்கு ஆஜராக வேண்டும்.விளையாட்டு விடுதி (7,8,9, பிளஸ்-1): தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, ஆக்கி, கபடி, கையுந்து பந்து (ஆண், பெண்) கிரிக்கெட், நீச்சல் (ஆண் மட்டும்) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அரங்கங்களில், ஆண்கள், 10ம் தேதி, காலை, 7:00 மணி, பெண்கள், 11ம் தேதி காலை, 7:00 மணிக்கு ஆஜராக வேண்டும்.இதில், மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுபவர்கள், மாநில அளவிலான தேர்வுக்கு தகுதி பெறுவர். அதன் விபரம் www.sdat.tn.gov.inஅதிகாரப்பூர்வ இணைய தளத்தில் உள்ளது.விளையாட்டு விடுதி மாநில அளவிலான நேரடி தேர்வு: குத்துச்சண்டை, வாள் விளையாட்டு, ஜூடோ, பளு துாக்குதல் (ஆண், பெண்), ஸ்குவாஷ் (ஆண் மட்டும்) சென்னை நேரு விளையாட்டு அரங்கம்; ஆண்கள் மட்டும், 13ம் தேதி காலை, 7:00 மணி, டேக்வாண்ேடா (ஆண், பெண்) கடலுார் மாவட்ட விளையாட்டு அரங்கம்; மல்லர் கம்பம் (ஆண் மட்டும்) விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கம்; மல்யுத்தம், வூஷூ (ஆண்கள் மட்டும்) திருச்சி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், 14ம் தேதி காலை, 7:00 மணிக்கு பெண்கள் மட்டும் ஆஜராக வேண்டும். சிறப்பு நிலை விளையாட்டு விடுதி: தடகளம், குத்துச்சண்டை, கபடி, பளு துாக்குதல், ஜூடோ (ஆண், பெண்) வாள் விளையாட்டு (ஆண் மட்டும்) சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் காலை, 7:00 மணிக்கு ஆஜராக வேண்டும். கூடைப்பந்து, கைப்பந்து, கையுந்து பந்து கால்பந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்திலும், ஹாக்கி (ஆண், பெண்), சென்னை எம்.ஆர்.கே. விளையாட்டு அரங்கத்திலும், நீச்சல் (பெண் மட்டும்) வேளச்சேரி நீச்சல் குளத்திலும் வரும், 6ம் தேதி காலை, 7:00 மணிக்கு ஆஜராக வேண்டும்.சிறப்பு நிலை விளையாட்டு விடுதி, வரும், 5ம் தேதி மாலை, 5:00 மணி; முதன்மை நிலை விளையாட்டு மையம்; 6ம் தேதி மாலை 5:00 மணி மற்றும் விளையாட்டு விடுதி; 8ம் தேதி மாலை 5:00 மணி ஆன்லைனில் மூலம் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் என் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஆன்லைனில் விண்ணப்பம் பூர்த்தி செய்ய முடியாது. மேலும், தகவல் பெற, 95140-00777 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு பயணப்படி, தினப்படி வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.