உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனப்பகுதியில் குப்பைகளால் யானைகளுக்கு ஆபத்து அகற்ற வேண்டியது அவசியம்

வனப்பகுதியில் குப்பைகளால் யானைகளுக்கு ஆபத்து அகற்ற வேண்டியது அவசியம்

குன்னுார் : குன்னுார் மலைப்பாதையோர வனப்பகுதியில் வீசி செல்லும் குப்பைகளால் யானைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.குன்னுார் மலைப்பாதையோர வனப்பகுதியில் வாகனங்களில் செல்வோர் மீன் கழிவு உட்பட பல்வேறு கழிவு பொருட்களை வீசி செல்கின்றனர். பல இடங்களிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை சுற்றுலா பயணிகள் பலரும் வீசி செல்கின்றனர். தற்போது பலாப்பழ சீசன் துவங்கிய நிலையில் யானைகள் அவ்வப்போது வந்து செல்கிறது.இந்நிலையில், குன்னுார் மரப்பாலம் -ஈச்சமரம் இடைபட்ட பகுதியில் ஒற்றை கொம்பன் யானை உலா வருகிறது. இந்த யானை அங்குள்ள குப்பை கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் துரித உணவின் பிளாஸ்டிக் கவர்கள் இடையே கடந்து செல்கிறது. அருகில் விழுந்து கிடக்கும் பலா பழங்களை சுவைக்கும் போது யானைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வனப்பகுதியில் குப்பைகளை வீசி செல்வோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அங்குள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை