உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வடிவமைப்புகளில் இருந்த பழங்கள் அகற்றப்பட்டு உரம் தயாரிக்க முடிவு

வடிவமைப்புகளில் இருந்த பழங்கள் அகற்றப்பட்டு உரம் தயாரிக்க முடிவு

குன்னுார்;குன்னுார் பழ கண்காட்சியில் வடிவமைப்புகளில், பழங்கள் அகற்றப்பட்டு விதை சேகரிக்கவும், இயற்கை உரம் தயாரிக்கவும் கொண்டு செல்லப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனின் நிறைவு நிகழ்ச்சியாக, குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 3 நாட்கள் நடந்த, 64வது பழ கண்காட்சியில், 5.5 டன் அளவில் அன்னாசி, ஆரஞ்ச், மாதுளம், திராட்சை, மாம்பழம், பலா பழங்களில், 'கிங்காங், வாத்து , டைனோசர்' அலங்கார நுழைவாயில் உட்பட பல்வேறு வடிவமைப்புகள் காட்சிபடுத்தப்பட்டன.ஒரு வாரத்திற்கும் மேல் காட்சிப்படுத்தப்பட்ட 'கிங்காங்' உட்பட வடிவமைப்புகளில் இருந்த பழங்கள் அகற்றப்பட்டு விதைகள் சேகரிக்கவும், இயற்கை உரம் தயாரிக்கவும் அனுப்பப்பட்டது. பயன்படுத்தப்படாத பழங்களை பழரசம் தயாரிக்கவும், எலுமிச்சை ஊறுகாய் தயாரிக்கவும், கொண்டு செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை