உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோடநாடு கொலை வழக்கு 4 பேரிடம் சி.பி.சி.ஐ.டி., விசாரணை

கோடநாடு கொலை வழக்கு 4 பேரிடம் சி.பி.சி.ஐ.டி., விசாரணை

கோவை:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் நான்கு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில், 2017ம் ஆண்டு ஏப்., 23ல் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.இச்சம்பவத்தில் முன்னாள் முதல்வர் ஜெ., கார் டிரைவர் கனகராஜ், கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ், உட்பட, 11 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

சம்மன்

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் அடுத்தடுத்து நடந்த மர்ம மரணங்கள் குறித்து, 36 பேர் அடங்கிய சி.பி.சி.ஐ.டி., போலீசார் குழு விசாரித்து வருகிறது. சசிகலா உட்பட, 500க்கு மேற்பட்டோர் இதுவரை விசாரிக்கப்பட்டுஉள்ளனர்.இடைக்கால விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இவ்வழக்கில், தொடர்புடைய நபர்களிடம் மீண்டும் விசாரணை நடத்துகின்றனர். ஏற்கனவே, சயான் உள்ளிட்டோரிடம், விசாரணை நடத்தப்பட்டது.இவ்வழக்கு, ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கோடநாடு எஸ்டேட்டில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் டிரைவர் ரமேஷ், காய்கறி கொடுத்து வந்த தேவன், கோவையை சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அப்துல்காதர் ஆகிய நான்கு பேரை, நேற்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பிஇருந்தனர்.நான்கு பேரும் நேற்று காலை 10:00 மணிக்கு, கோவை பி.ஆர்.எஸ்., மைதானத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராகினர்.

கேள்வி

இவர்களில் ரமேஷ், தேவன் ஆகியோர் கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்ததால், எஸ்டேட்டிற்கு யாரெல்லாம் வந்து சென்றனர், கொலை, கொள்ளை சம்பவம் நடந்த அன்று, அவர்கள் எங்கு இருந்தனர் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. விசாரணை முடிவில், மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை