மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
8 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
9 hour(s) ago
ஊட்டி:'கோத்தகிரியிலிருந்து அணிக்கொரைக்கு நேரடி பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்,' என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊட்டி அருகே துானேரி ஊராட்சிக்கு உட்பட்ட அணிக்கொரை கிராமத்தில், 400க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கோத்தகிரியிலிருந்து அணிக்கொரை வழித்தடம் வரை ஏராளமான கிராம மக்கள் அணிக்கொரை உட்பட சுற்று வட்டார கிராமங்களில் உள்ள உறவினர் வீடுகளுக்கு வந்து செல்வது அதிகரித்துள்ளது. ஆனால், கோத்தகிரியிலிருந்து அணிக்கொரை வரை பஸ் வசதி இல்லை. இதனால், கிராம மக்கள் பல கி.மீ, தூரம் சுற்றி வெவ்வேறு வழித்தட பஸ்களில் வந்து செல்வதால் அலைச்சல், பணம் விரயத்தால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண, 'கோத்தகிரி -அணிக்கொரை நேரடி பஸ் வசதி வேண்டும்,' என, அணிக்கொரை உட்பட, 6 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கிராம மக்கள் போக்குவரத்து துறைக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். கிராம மக்கள் கூறுகையில், 'அணிக்கொரை சுற்றுவட்டார கிராம மக்கள் தேவையை கருத்தில் கொண்டு கோத்தகிரியிலிருந்து அணிக்கொரைக்கு நேரடி பஸ் வசதி ஏற்படுத்தி தரவேண்டும். அதே சமயத்தில், ஊட்டியிலிருந்து அணிக்கொரைக்கு இயக்கப்பட்டு வந்த பஸ்சை இரு வேளை துானேரி கிராமம் வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அணிக்கொரை வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
8 hour(s) ago
9 hour(s) ago