உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குஞ்சப்பனை காட்சி முனை பகுதி சுற்றுலா பயணிகள் கூட்டம்

குஞ்சப்பனை காட்சி முனை பகுதி சுற்றுலா பயணிகள் கூட்டம்

கோத்தகிரி;கோத்தகிரி குஞ்சப்பனை காட்சிமுனையில் இருந்து சுற்றுலா பயணிகள் சமவெளி பகுதியை ரசித்து வருகின்றனர்.கோத்தகிரி- -மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை பழங்குடியினர் கிராமம் அமைந்துள்ளது. கிராமத்திற்கு சற்று மேல் பகுதியில், சாலையோரத்தில் காட்சி முனை அமைந்துள்ளது.இந்த காட்சி முனையில் இருந்து, தாழ்வான பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் உட்பட, கோவை மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களை காண முடியும்.மேலும், வளைந்து நெளிந்து செல்லும் பவானி ஆற்றின் அழகு, மலை பாதை, சிறுமுகை வயல் வெளிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இரவு நேரத்தில், வான் நட்சத்திரம் போல, சமவெளி பகுதியின் மின் ஒளியும் வசீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.இதனால், சுற்றுலா பயணிகள் காட்சி முனையில் இருந்து இயற்கை காட்சிகளை கண்டு செல்வது வழக்கம். தற்போது, ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்து வருகிறது. ஊட்டிக்கு சுற்றுலா சென்று வரும் பயணிகள், கொண்டை ஊசி வளைவுகள் குறைந்த கோத்தகிரி சாலையை அதிகம் பயன்படுத்துவதால், சாலையோர காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் இயற்கையை கண்டு களித்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை