| ADDED : ஜூன் 25, 2024 11:56 PM
பந்தலுார்:கூடலுாரில் இருந்து பந்தலுார் வழியாக பல்வேறு பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ஊரின் பெயர்கள் பஸ்களின் முன் மற்றும் பின் பக்கங்களில் பயணிகள் பார்வைக்கு படும் வகையில் வைக்கப்படும். தற்போது அவை டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு, ஊரின் பெயர்கள் 'டிஜிட்டலில்' ஓடிக்கொண்டே இருக்கும். அதில், கூடலுாரில் இருந்து பந்தலுார் வழியாக இயக்கப்படும் பெரும்பாலான பஸ்களில், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் செயல்படாமல் உள்ளது. இதனால், எந்த பஸ் எந்த ஊருக்கு செல்கிறது என்று தெரியாமல் பயணிகள், பஸ்சில் பயணிக்க முடியாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது, மழை பெய்து வரும் நிலையில் இது போன்ற சூழ்நிலையால், பஸ்கள் நிறுத்தத்தில் இருந்து சென்றவுடன் ஓடி சென்று ஏறவும் முடியாமல் மாணவர்கள் மற்றும் வயதான பயணிகள் சிரமப்படுகின்றனர். பயணிகள் கூறுகையில், 'பயணிகள் பார்வையில் படும் வகையில் ஊரின் பெயர்களை ஒவ்வொரு அரசு பஸ்களிலும் பலகையில் மீண்டும் எழுதி வைக்க வேண்டும்,' என்றனர்.