மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
19 hour(s) ago
கோத்தகிரி;ஊட்டி எப்பநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு ஒன்றியம் சார்பில் உறுப்பினர் கல்வித் திட்டம் விழா நடந்தது.கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் தயாளன் தலைமை வகித்து பேசுகையில், ''கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கங்களில் அங்கத்தினர்கள் கடன் பெற்று, உரிய காலத்தில் திருப்பி செலுத்த வேண்டும். மேலும், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு உறுப்பினர்கள் அதிக அளவில் பசுந்தேயிலை வினியோகிக்க முன்வர வேண்டும்,'' என்றார். நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் அய்யனார் முன்னிலை வகித்தார். எப்பநாடு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை மேலாண்மை இயக்குனர் பாலாஜி திட்டங்கள் குறித்து பேசினார்.தொடர்ந்து, உறுப்பினர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. எப்பநாடு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 85 உறுப்பினர்கள் பங்கேற்றனர். கடன் சங்க எழுத்தர் பிரேமா நன்றி கூறினார்.
19 hour(s) ago