| ADDED : ஜூன் 29, 2024 01:51 AM
பாலக்காடு:ரயில் பயணியர் பாதுகாப்பாக ஓய்வெடுக்க, நவீன வசதிகளுடன் கூடிய ஓய்வு அறைகள், பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:குளிரூட்டப்பட்ட ஓய்வு அறைகளில் தூய்மையான கழிவறை, மொபைல் போன் சார்ஜிங் அமைப்பு, புத்தகங்கள் படிப்பதற்கான வசதி, இலவச 'வை-பை' ஆகியவை அமைத்துள்ளன. ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் 30 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பயணியர் முன்கூட்டியே பதிவு செய்யாமல், ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து ஓய்வு அறையை பயன்படுத்தலாம். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை.பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள, பாலக்காடு சந்திப்பு (நடைமேடை - 2), சொரனூர் சந்திப்பு (நடைமேடை - 4), திரூர் (நடைமேடை - 1), கோழிக்கோடு (நடைமேடை - 1), கண்ணூர் (நடைமேடை - 1), மங்களூரு சென்ட்ரல் (நடைமேடை - 1), ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.