உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நாவா நிறுவனர் பிறந்த நாளில் சிறந்த ஆளுமை திறன் விருது

நாவா நிறுவனர் பிறந்த நாளில் சிறந்த ஆளுமை திறன் விருது

ஊட்டி;கோத்தகிரியில், நீலகிரி ஆதிவாசி நலச் சங்க நிறுவனர் பத்ம ஸ்ரீ டாக்டர் நரசிம்மனின், 107 வது பிறந்த நாள் விழா, 'நாவா' அலுவலக வளாகத்தில் நடந்தது.சங்க தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுர்ஜித் , நாவா செயலாளர் ஆல்வாஸ் முன்னிலை வகித்தனர்.இதில், மருத்துவர்கள், பல்துறை அறிஞர்கள், 'சிக்கிள் செல் அனீமியா கருத்தரங்கு, பழங்குடியினர் சார்ந்த கண்காட்சி, சிறப்பு மருத்துவ முகாம், முன்னாள் மாணவர் சந்திப்பு நடந்தது. நிகழ்ச்சியில், மருத்துவம், கல்வி, குழந்தைகள் நலம், காவல் பணி, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை செய்த, 10 பேருக்கு, சிறந்த சமூக சேவைக்கான ஆளுமைத்திறன் விருது வழங்கப்பட்டது.கல்வித்துறை சார்பில், 'பள்ளி நிர்வாக மேலாண்மை, பழங்குடியினர் குழந்தைகள் நலம் , சுற்றுச்சூழல், சமுதாய பங்களிப்பு ஆகியவற்றுக்கு, கோத்தகிரி கடசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன், கூடலுார் மாவனள்ளா அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை நல்லம்மாள் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. நாவா மக்கள் தொடர்பு அலுவலர் புஷ்பகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி