மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
16 hour(s) ago
யானை தாக்கியதில் ஒருவர் காயம்
16 hour(s) ago
வடகிழக்கு பருவ மழை எதிரொலி; மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
16 hour(s) ago
ஊட்டி : ''நீலகிரியில் பருவமழையால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதை தடுத்து, அத்தியாவசிய தேவைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறினார்.நீலகிரி மாவட்ட கலெக்டராக இருந்த அருணா புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஈரோடு மாவட்ட வணிகவரித்துறை இணை ஆணையராக இருந்த லட்சுமி பவ்யா தண்ணீரு, நீலகிரி மாவட்ட கலெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நேற்று மதியம் அவர், 116வது கலெக்டராக பதவி ஏற்றுக்கொண்டார். பின், லட்சுமி பவ்யா தண்ணீரு நிருபர்களிடம் கூறியதாவது, ''நீலகிரியில் பணியாற்றுவதில் எனக்கு மகிழ்ச்சி. மாவட்டத்தின் பிரச்னைகளை அறிந்து, அரசின் நலத்திட்டங்களை கடைக்கோடி மக்கள் வரை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக, மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், அத்தியாவசிய தேவைகள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்,''என்றார்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago