மேலும் செய்திகள்
அணைகள் நீர்மட்டம்
16 hour(s) ago
ஊட்டி;ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில், 'துணை மையங்களுக்கு தாய், சேய் நலன் சார்ந்த களப்பணிகளின் முக்கியத்துவம் கருதி, கிராம சுகாதார செவிலியர் பயிற்சி முடித்து பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களுக்கும் கிராம சுகாதார செவிலியர்களை பணியில் அமர்த்த வேண்டும்.தாய்சேய் நலப்பணிகள், தடுப்பூசி பணிகளில் அனைத்து தரவுகளையும் சரிபார்த்து பரிந்துரை செய்ய, சமுதாய நல செவிலியர்களுக்கு இலவச 'லேப்டாப்' வழங்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பப்பட்டது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து, செவிலியர்கள் பலர் பங்கேற்றனர்.
16 hour(s) ago