உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சவுக்கு சங்கரை விசாரிக்க ஒரு நாள் போலீஸ் கஸ்டடி

சவுக்கு சங்கரை விசாரிக்க ஒரு நாள் போலீஸ் கஸ்டடி

ஊட்டி;ஊட்டியல் நடந்த வழக்கு விசாரணையில், சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.பெண் போலீசாரை அவதுாறாக பேசியது தொடர்பாக, ஊட்டி புது மந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி கொடுத்த புகார்படி, நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார், சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிந்தனர்.அந்த வழக்கு விசாரணைக்காக, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் இருந்து நேற்று, ஊட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழினியன் முன் சவுக்கு சங்கரை போலீசார் ஆஜர்படுத்தினர். 'சவுக்கு சங்கரை ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்,' என, போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 'ஒரே குற்ற வழக்கிற்கு, இரண்டு, மூன்று முறை கஸ்டடிக்கு எடுக்க அனுமதிக்கக் கூடாது,' என, சவுக்கு சங்கர் வக்கீல் பாலநந்தகுமார் வாதாடினார். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'சவுக்கு சங்கரை, ஒரு நாள் (24 மணி நேரம்) போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கலாம்,' என, அனுமதி அளித்தார். மேலும், 'இன்று(30ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு சவுக்கு சங்கரை, மருத்துவ பரிசோனை செய்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்,' எனவும் உத்தரவிட்டார்.வக்கீல் பால நந்தகுமார் நிருபர்களிடம் கூறுகையில், ''ஊட்டியை சேர்ந்த இன்ஸ்பெக்டர் அல்லிராணி அளித்த புகாரின் படி, சவுக்கு சங்கர் இன்று (நேற்று) ஊட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாளில் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்

சவுக்கு சங்கருக்கு ஜாமின் அனுமதி

மதுரை: தேனி பூதிப்புரத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது காரில் கஞ்சா இருந்ததாக சவுக்கு சங்கர் உட்பட சிலர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.கைதான சவுக்கு சங்கரின் ஜாமின் மனுவை மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே 2 முறை தள்ளுபடி செய்தது. மீண்டும் அதே நீதிமன்றத்தில் அவர் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி செங்கமலச்செல்வன்: ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பழனிசெட்டிபட்டி போலீசில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை