உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் ஆர்கானிக் வார சந்தை துவக்கம்

குன்னுாரில் ஆர்கானிக் வார சந்தை துவக்கம்

குன்னுார்;நீலகிரி மாவட்டத்தில், காய்கறி விவசாயத்தில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் தீங்குகளை களைய 'ஆர்கானிக்' வேளாண்மை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்கிறது.இதற்காக, 2019ல் மாநில தோட்டக்கலை துறையின் கீழ், மாவட்டத்தில் 'ஆர்கானிக் நீலகிரி மிஷன்' திட்டம் செயல்படுத்தப்பட்டது. நடப்பு நிதியாண்டில் வேளாண் நிதி நிலை அறிக்கையில், ஆர்கானிக் முறையை ஊக்குவிக்க, இத்திட்டத்திற்கு, 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.நேற்று குன்னுார் சிம்ஸ்பூங்கா அருகே தோட்டக் கலை துறை அலுவலகத்தில் 'ஆர்கானிக்' வார சந்தையை தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி துவக்கி வைத்தார். பின், நிருபர்களிடம் கூறுகையில், ''நஞ்சற்ற உணவு பொருட்கள் வாங்கவும், 'ஆர்கானிக்' விவசாயத்தை ஊக்குவிக்கவும் இனி குன்னுாரில், சனிக்கிழமை தோறும் வார சந்தை நடத்தப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை