உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிவசெந்துார் நகரில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி

சிவசெந்துார் நகரில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி

குன்னுார்;குன்னுார் தாலுகா, கேத்தி பாலாடா அருகே, 17வது வார்டுக்கு உட்பட்ட சிவசெந்துார் நகரில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு கேத்தி பேரூராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த, 20 நாட்களாக குடிநீர் வராததால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மக்கள் ஊற்று நீரை பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கிணற்று நீரை சிலர் மோட்டார் வைத்து தண்ணீரை திருடி விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து இப்பகுதி கவுன்சிலரிடம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மக்கள் கூறுகையில்,'குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை