உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மது பாட்டில்களை கடத்திய நபர் கைது.. கார் பறிமுதல் : விசாரணை

மது பாட்டில்களை கடத்திய நபர் கைது.. கார் பறிமுதல் : விசாரணை

ஊட்டி : சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்க காரில் கொண்டு சென்ற நபரை போலீசார் கைது செய்து, 192 மதுபாட்டில்கள், காரை பறிமுதல் செய்ததனர்.ஊட்டியில் சட்ட விரோதமாக மது விற்பனை அதிகளவில் நடப்பதாக போலீசாருக்கு அடிக்கடி புகார் வருகிறது. ஊட்டி பி1 எஸ்.ஐ., சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ஊட்டி மத்திய பஸ் நிலையம், மின்வாரிய அலுவலகம் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இரவு, 11:00 மணி அளவில் அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். காருக்குள் இருந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதை தொடர்ந்து காரை சோதனை செய்த போது அதில் சட்ட விரோதமாக ஒரே சமயத்தில் அதிக அளவு மது வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. விசாரணையில், ஊட்டி எச்.பி.எப்., இந்து நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ், 51, என்பது தெரியவந்தது. இவர் குத்தகைக்கு காட்டேஜ் எடுத்து நடத்தி வருவதும் தெரிய வந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேசை கைது செய்து அவரிடமிருந்த, 192 மது பாட்டில்கள், மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ