மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
11 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
11 hour(s) ago
கூடலுார் ;' 'கூடலுார், பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள, காட்சி கோபுரங்களுக்கு, சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலுார், நாடுகாணி பொன்னுார் தோட்டக்கலை பண்ணையை சுற்றுலாத்தலமாக மாற்றும் நடவடிக்கை நடந்து வருகிறது. இதற்காக அப்பகுதியில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பசுமையான இயற்கை காட்சிகளைசுற்றுலா பயணிகள் ரசித்து செல்லும் வகையில், மலை உச்சியில், சில ஆண்டுகளுக்கு முன் இரண்டு காட்சி கோபுரங்கள் அமைக்கப்பட்டன.அப்பகுதிக்கு செல்லும் மண் சாலையில், சிறிது துாரம் மட்டும் இண்டர்லாக் சாலை அமைத்துள்ளனர். மீதமுள்ள பகுதி சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும், காட்சி கோபுரங்கள் பயன்பாட்டுக்கு வராத காரணத்தால் அவை சேதமடைந்து, பயனற்ற நிலைக்கு மாறும் சூழல் உள்ளது. எனவே, காட்சி கோபுரம் வரை செல்லும் சாலையை சீரமைத்து சுற்றுலா பயணிகள் சென்று வர அனுமதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.மக்கள் கூறுகையில், 'பொன்னுார் பண்ணையில், அமைக்கப்பட்டுள்ள காட்சி கோபுரத்துக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதன், மூலம் இப்பகுதியில் சுற்றுலா மேம்படும்,' என்றனர்.
11 hour(s) ago
11 hour(s) ago