மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
23 hour(s) ago
ஊட்டி:ஊட்டியில் தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) பேரமைப்பின் சார்பில், ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். அண்ணாதுரை ஜெயசீலன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் முருகேசன் கூறுகையில், ''தொடக்க கல்வியை பொறுத்தவரையில் மாணவர்களுடைய கல்வி நலன் மீது அக்கறை கொண்டுள்ள மலை மாவட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து வனவிலங்கு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அரசாணை-243 பதவி உயர்வை தடுக்கிறது. இதனால், அரசாணை-243 ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பழைய நடைமுறையில் பணி மாறுதல், கலந்தாய்வு, பதவி உயர்வு அனைத்தும் நடைபெற வேண்டும்,'' என்றார். போராட்டத்தில் ஈடுபட முயன்ற, 23 பெண்கள் உட்பட, 51 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 hour(s) ago