மேலும் செய்திகள்
தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை எதிர்த்து மறியல் போராட்டம்
40 minutes ago
பழங்குடியினர் கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு
41 minutes ago
அன்னூர் : தமிழக அரசின் புதிய விதிமுறையால், அன்னூரில் கொப்பரை கொள்முதல் மந்தமாக உள்ளது. அன்னூர் வட்டாரத்தில் தொழிலாளர் பற்றாக்குறை, போதுமான மழை இல்லாதது, நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது, விளை பொருட்களுக்கு கட்டுபடியாகும் நிலையான விலை இல்லாதது ஆகிய காரணங்களால் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் தென்னந் தோப்புகளாக மாற்றப்பட்டன.இந்நிலையில் தோப்பு அதிகரித்ததால் தேங்காய்க்கு கட்டுபடியாகும் விலை கிடைப்பதில்லை. இந்நிலையில் மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் இந்த சீசனுக்கு கொப்பரை கொள்முதல் செய்வதாக அறிவித்தது. அரவை கொப்பரைக்கு ஒரு கிலோவுக்கு 111 ரூபாய் 60 காசும், பந்து கொப்பரைக்கு 120 ரூபாயும் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்தது. அரசு அறிவித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் அன்னூரில் கொப்பரை கொள்முதல் அதிகரிக்கவில்லை.இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது : தற்போது தமிழக அரசு புதிதாக ஒரு விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டுமே கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.இதனால் வேறு பகுதியிலிருந்து கொப்பரை கொள்முதல் நூறு சதவீதம் நின்று போனது. உள்ளூரிலிருந்து மிகக் குறைந்த அளவிலே மட்டும் கொப்பரை விற்பனை செய்ய வருகின்றனர். 'அதுவும் அன்னூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 250 முதல் 300 மூட்டை சேர்ந்த பிறகு மொத்தமாக கொள்முதல் செய்தால் தான் கோவையில் உள்ள கிடங்குக்கு கொண்டு செல்ல முடியும். குறைந்த அளவு கொப்பரை கொள்முதல் செய்து வைத்தால் எடை இழப்பு ஏற்படும். வாடகை கட்டுபடியாகாது, என்று அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போது வெளிச்சந்தையில் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்குகின்றனர். உடனடியாக பணம் தருகின்றனர்.ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்றால் பணம் கிடைக்க முப்பது நாள் வரை ஆகிறது. மேலும் தோட்டத்தில் ஏற்றுக் கூலி, விற்பனை கூடத்தில் இறக்கு கூலி ஆகிய செலவு உள்ளது.மேலும் எடை இழப்பும் ஏற்படுகிறது. எனவே தென்னை விவசாயிகள் பலர் வெளிமார்க்கெட்டில் விற்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், ஒழுங்குமுறை விற்பனை கூடம் காற்று வாங்கி வருகிறது.மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்து கொப்பரை கொண்டு வந்தாலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யலாம் என முந்தைய விதிமுறையை அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும்.அன்னூர் பகுதியில் கொப்பரை உலர் களம் மிகவும் குறைவு. எனவே முழு தேங்காயாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டால் உடனடியாக பணம் வழங்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே தென்னை விவசாயிகளை காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் தேங்காய், இளநீர், கொப்பரை விலை வீழ்ச்சியால் நஷ்டத்துக்குள்ளாவது தொடரும்.இவ்வாறு தென்னை விவசாயிகள் தெரிவித் தனர்.
40 minutes ago
41 minutes ago