உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மழை வெள்ளத்தில் மூழ்கிய தரைபாலம் வாகன போக்குவரத்து பாதிப்பு

மழை வெள்ளத்தில் மூழ்கிய தரைபாலம் வாகன போக்குவரத்து பாதிப்பு

பந்தலுார்:பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர் மழை பெய்தது.அதில், பொன்னணி ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்பட்டது. மேலும், பாலாவயல் பகுதியில், ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணியால், பொதுமக்கள் நடந்து செல்லவும், சிறு வாகனங்கள் செல்லவும் அமைக்கப்பட்டு இருந்த தரைப்பாலம், கடந்த இரண்டு நாட்கள் முன்னர் பாதிக்கப்பட்டதால், வாகன போக்குவரத்து தடைப்பட்டது. பொதுமக்கள் இந்த பாலத்தை கடந்து செல்ல ஏதுவாக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.நேற்று காலை இந்த ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்து, தரை பாலம் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இதேபோல், நெலாக்கோட்டை அருகே கூவச்சோலை கண்ட இடத்தில் சாலை ஓரத்தில் லேசான மண்சரிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ