மேலும் செய்திகள்
பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
10-Oct-2025
வீட்டை இடித்த யானைகள்; வனத்துறையினர் ஆய்வு
10-Oct-2025
அணைகள் நீர்மட்டம்
10-Oct-2025
கூடலுார்;முதுமலையில், ஊர்வன மற்றும் இருவாழ்வு உயிரினங்கள் குறித்த கணக்கெடுப்பு பணியில் வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் முதல் முறையாக, பிப்., மாதம் ஊர்வன மற்றும் இரு வாழ்வு உயிரினங்கள் குறித்து மூன்று நாட்கள் கணக்கெடுப்பு பணி நடந்தது. அதில், 51 வகை ஊர்வன இனங்கள் மற்றும் 31 வகை இருவாழ்வு உயிரினங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, பருவமழை காலத்துக்கான ஊர்வன மற்றும் இருவாழ் உயிரினங்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நேற்று முன்தினம் துவங்கியது. கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி முகாம் தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள, மேம்பட்ட வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் நடந்தது. இதில் வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து, இந்த குழுவினர் குழக்களாக பிரிந்து, 17 இடங்களில் நேற்று மாலை முதல் இரவு வரை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இப்பணி நாளை (16ம் தேதி) நிறைவு பெறுகிறது.வனத்துறையினர் கூறுகையில், 'முதுமலையில் ஊர்வன மற்றும் இருவாழ் உயிரினங்கள் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், தன்னார்கள்கள் ஈடுப்பட்டுள்ளனர். இப்பணிகள், காலை, 8:30 முதல் 11:30 மணி வரையும் மாலை முதல் இரவு, 11:00 வரையும் நடைபெறுகிறது. கணக்கெடுப்பு முடிவில் ஊர்வன மற்றும் இரு வாழ்வு உயிரின வகைகள் குறித்து தெரியவரும்,' என்றனர்.
10-Oct-2025
10-Oct-2025
10-Oct-2025