உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கிராமத்தில் கதவுகளை தட்டும் கரடி நுந்தளா குடியிருப்பு வாசிகள் பீதி

கிராமத்தில் கதவுகளை தட்டும் கரடி நுந்தளா குடியிருப்பு வாசிகள் பீதி

ஊட்டி;ஊட்டி அருகே, நுந்தளா கிராமத்தில் இரவு நேரங்களில் குடியிருப்பு கதவுகளை தட்டும் கரடியால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.நீலகிரியில், சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால், குடியிருப்பு வாசிகள் இரவு நேரங்களில் குடியிருப்பை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர்.இந்நிலையில் ஊட்டி அருகே நுந்தளா கிராமத்தில், கடந்த இரண்டு வாரங்களாக இரவு நேரங்களில் கரடியின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது. கிராமத்திற்குள் உலா வந்த கரடி குடியிருப்பின் கதவை தட்டி வருகிறது.உடனே குடியிருப்பு வாசிகள் கூச்சலிட்டவுடன் அங்கிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.இந்த காட்சியை கிராம மக்கள் மொபைல் போனில் பதிவு செய்து, கரடி நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர். கரடி நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ