உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஏழு ஆக்கிரமிப்பு கடைகளை இடிக்க வருவாய் துறை நோட்டீஸ்

ஏழு ஆக்கிரமிப்பு கடைகளை இடிக்க வருவாய் துறை நோட்டீஸ்

குன்னுார்;குன்னுார் ஆற்றோரத்தில், 7 ஆக்கிரமிப்பு கடைகள் இடிக்க 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.குன்னுார் பஸ் ஸ்டாண்ட், டி.டி.கே., சாலை, ஆட்டோ ஸ்டாண்ட் எதிர்புறம் ஆற்றோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கடந்த, 2019ல் ஐகோர்ட் உத்தரவிட்டது. அப்போது, ஆற்றோர ஆக்கிரமிப்பில், 73 கடைகள் இருந்த நிலையில், 55 கடைகளை இடிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது. 'முதற்கட்டமாக, 42 கடைகள், இரண்டாம் கட்டமாக இரு கடைகள்,' என, மொத்தம் 44 கடைகள் அகற்றப்பட்டன.இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் எதிரே, 7 கடைகள் இடிக்க நேற்று வருவாய் துறை சார்பில் ஆக்கிரமிப்பு கடைகளில் உள்ளவர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.வருவாய் துறையினர் கூறுகையில், ''ஐகோர்ட் உத்தரவின் பேரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் ஒருவர் என தடையாணை பெறுவதால் தாமதமாகி வருகிறது. இங்கு எந்த கடைகளுக்கும் பட்டா இல்லை. சில கடைகளுக்கு மட்டும் 'கண்டிஷனல் அசைன்மென்ட்டில்' இடம் வழங்கப்பட்டது.விரைவில் கடைகள் இடிக்கப்பட உள்ளது,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ