உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நெடுஞ்சாலையில் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்

நெடுஞ்சாலையில் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்

குன்னுார்:குன்னுார்- ஊட்டி சாலை, பிக்கட்டி பகுதியில் சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது.குன்னுார் -ஊட்டி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் தற்போது ஒப்பந்ததாரர் பிரச்னை காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.அதில், பிக்கட்டி பகுதியில் சாலையோரம் கார்கள் மட்டுமின்றி தார் ஊற்றும் இயந்திர வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே தனியார் குழந்தைகள் பள்ளி உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.இது குறித்த பல முறை புகார் தெரிவித்தும் போலீசாரும், நெடுஞ்சாலை துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, அங்கு நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்துவதுடன் மீண்டும் நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி