மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
13 hour(s) ago
யானை தாக்கியதில் ஒருவர் காயம்
13 hour(s) ago
வடகிழக்கு பருவ மழை எதிரொலி; மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
13 hour(s) ago
கூடலுார், - கூடலுார் தேவர்சோலை சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வளர்ந்துள்ள முட்புதர்கள் அகற்றாததால் ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுார் தேவர்சோலை சாலை, கேரளா வயநாடு மாவட்டம், பாட்டவயல், பிதர்காடு, நெலாக்கோட்டை, தேவர்சோலை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இச்சாலையில், எப்போதும் வாகன போக்குவரத்து உள்ளது. இந்த சாலையோரங்கள் தொடர்ச்சியாக பராமரிப்பு இன்றி, சாலை ஓரங்களில் செடிகள் வளர்ந்து முட்புதர்களாக காணப்படுகிறது. வாகன போக்குவரத்துக்கும் மக்கள் நடந்து செல்லவும் சிரமம் ஏற்படுவதுடன், வளைவான பகுதிகளில் வளர்ந்துள்ள முற்புதர்களால் வாகன முகப்புகள் பாதிக்கும் அபாயமும் உள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை இல்லாததால் ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஓட்டுனர்கள் கூறுகையில், 'இச்சாலையில் பல இடங்களில், குறிப்பாக வளைவான பகுதிகளில் வளர்ந்துள்ள முட்புதர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது விபத்துகள் அபாயமும் உள்ளது. எனவே, அவைகளை அகற்றி சாலையோரங்களை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago