உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கலை நிகழ்ச்சிகள் அசத்தல் பார்வையாளர்கள் பிரமிப்பு

கலை நிகழ்ச்சிகள் அசத்தல் பார்வையாளர்கள் பிரமிப்பு

குன்னுார்:குன்னுார் சிம்ஸ் பூங்காவில் நடந்த, 64வது பழகண்காட்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.குன்னுார் சிம்ஸ் பூங்காவில் நடந்த, 64வது பழ கண்காட்சியில், டென்னிஸ் கோர்ட் பகுதியில் அமைக்கப்பட்ட அரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.அதில், வெலிங்டன் ராணுவ மையத்தின் இசை குழுவினரின் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சி தேசப்பற்றை வெளிப்படுத்தியது.செங்கல்பட்டு விநாயகா கலாக் ஷே த்ரா பரதநாட்டிய குழுவினரின் பரதநாட்டியம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அருவங்காடு சிலம்ப கலைக்கூடம் சார்பில் நடந்த, சிறுவர், சிறுமியரின் சிலம்பாட்டத்தில் வால் சண்டை, கத்திச்சண்டை உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவா கவர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை