மேலும் செய்திகள்
பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
11 hour(s) ago
வீட்டை இடித்த யானைகள்; வனத்துறையினர் ஆய்வு
11 hour(s) ago
அணைகள் நீர்மட்டம்
11 hour(s) ago
தென் மாநில தேயிலை ஏலங்களில் சரிவு
11 hour(s) ago
பந்தலுார்;பந்தலுார் அருகே பிதர்காடு அரசு துவக்கப்பள்ளி வழியாக கைவட்டா, மாணிவயல், அரசு மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலை அமைந்துள்ளது. பிதர்காடு பகுதியில் இருந்து பாட்டவயல் செல்லும் சாலையில் இருந்து, பிரிந்து செல்லும் மேட்டுப்பாங்கான இந்த சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதனால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன், 'கூடலுார் ஊராட்சி ஒன்றியம் சார்பில், 10 லட்சம் ரூபாய் மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சி சார்பில், 6- லட்சம்,' என, மொத்தம், 16 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பழுதடைந்த சாலை சிமென்ட் சாலையாக மாற்றம் செய்யப்பட்டது.இந்நிலையில், சீரமைத்து மூன்றே மாதத்தில் சாலை பெயர்ந்து, கற்கள் வெளிய வர துவங்கியுள்ளது. தற்போது பருவ மழை பெய்து வரும் நிலையில், சாலை மீண்டும் முழுமையாக சேதம் அடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலைக்கு மாறும் அபாயம் உள்ளது.எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago