உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் கோடைகால கலாசார விழா நடனங்களில் அசத்திய கலைஞர்கள் இசை, நடனங்களில் அசத்திய கலைஞர்கள்

குன்னுாரில் கோடைகால கலாசார விழா நடனங்களில் அசத்திய கலைஞர்கள் இசை, நடனங்களில் அசத்திய கலைஞர்கள்

குன்னுார்;குன்னூர் கிளப்பில், பாரதிய வித்யா பவன், 18வது ஆண்டு கோடைகால இசை மற்றும் நடன கலாசார விழா, 3 நாட்கள் நடந்தது. விழாவை வித்யா பவன் தலைவர் கீதா சீனிவாசன் துவக்கி வைத்தார்முதல் நாள் ஜோஸ்னா ஜெகநாதனின் பரதநாட்டியம் இடம்பெற்றது. அதில், சிவன் மற்றும் நந்தியுடன் உரையாடல், கிருஷ்ணா, ஜெயதேவா யாஹி கேசவா பாடலுக்கு ஏற்ப தில்லானா ஆகியவை அனைவரையும் கவர்ந்தது.பெங்களூரு குச்சிப்புடி நடன கலைஞர் குருராஜுவின் குச்சிப்புடி நடனத்தில். ராமாயணம், தசாவதார சபதம் ஆகியவை பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது. தொடர்ந்து, குச்சிப்புடி நடனத்தில் கிருஷ்ண தரங்கம் பாரம்பரிய முறையில் அரங்கேற்றினார்.நிறைவாக சென்னையை சேர்ந்த கர்நாடக இசை கலைஞர் வித்யா கல்யாண ராமனின் கர்நாடக இசை, அனந்தகிருஷ்ணனின் வயலின் மற்றும் கும்பகோணம் சுவாமிநாதனின் மிருதங்கத்துடன் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இதில் கணேசன், கிருஷ்ணா, பாரத மாதா உள்ளிட்ட பல்வேறு பாடல்கள் அனைவரையும் ஈர்த்தது.விழாவில், ஊட்டி, கோத்தகிரி, குன்னுார் உட்பட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பாரதிய வித்யா பவன் நீலகிரி கேந்திரா உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்