| ADDED : ஏப் 16, 2024 11:44 PM
ஊட்டி;ஊட்டியில் ஓட்டு எண்ணும் மையத்தில் நடந்து வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை, தேர்தல் நடத்தும் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.மாநிலத்தில் வரும், 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், 'பேலட் சீட்' பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வழங்கும் பணியில், தேர்தல் நடத்தும் அலுவலர்களால் நடந்து வருகிறது.தேர்தலில் பதிவாகும் ஓட்டு பெட்டிகள் அனைத்தும், ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் உள்ள 'ஸ்ட்ராங் ரூமில்' பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது. இந்நிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் ஓட்டு எண்ணும் அறை, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் வைக்கும் பாதுகாப்பு அறை, ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்படும் அறை, முகவர்கள் வந்து செல்லும் பாதைமற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.