உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் விழுந்த மரத்தை அறுத்து அகற்றிய பஸ் நடத்துனர்

சாலையில் விழுந்த மரத்தை அறுத்து அகற்றிய பஸ் நடத்துனர்

கூடலுார்;கூடலுார் கீழ்நாடுகாணி அருகே, தமிழக-கேரளா எல்லையில், சாலையில் விழுந்த மரத்தை, பயணிகள் உதவியுடன், கேரளா அரசு பஸ் நடத்துனர் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தார்.தமிழக- கேரளா எல்லையான கீழ்நாடுகாணி அருகே நேற்று காலை, 7:15 மணிக்கு, சாலையின் குறுக்கே விழுந்த மரத்தால், தமிழக-கேரளா - கர்நாடக இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவ்வழியாக இயக்கப்படும் வாகனங்கள் சாலையின் இரு புறமும் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டன.இந்நிலையில், கேரளா வயநாடு மாவட்டம் கல்பட்டாவிலிருந்து, மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா செல்லும் அரசு பஸ் நடத்துனர் கிரீஸ்குமார், தோட்ட தொழிலாளர்களிடம் மரம் அறுக்கும் இயந்திரம் ஒன்றை பெற்று மரத்தை அறுத்து பயணிகள் உதவியுடன் அப்புறப்படுத்தி, 8:00 மணிக்கு போக்குவரத்து சீரமைத்தார். அவருக்கு பயணிகள், ஓட்டுனர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை