| ADDED : ஜூலை 10, 2024 12:27 AM
குன்னுார்;குன்னுார் உலிக்கல் குடியிருப்பு பகுதிக்கு வந்து குப்பை தொட்டியில் உணவை உட்கொண்டு செல்லும் கரடியை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உணவைத் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு கரடிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலிக்கல் பகுதிகளில் உலா வரும் கரடி அங்குள்ள கோவில்களில் எண்ணெய் குடித்து செல்வதும், குப்பை தொட்டியில் உள்ள குப்பைகளில் இருந்து உணவை உட்கொண்டும் செல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.இது தொடர்பாக, மக்கள் அளித்த புகாரின் பேரில், மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில், வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில், வனத்துறையினர் குப்பைதொட்டி அருகில் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.