மேலும் செய்திகள்
அணைகள் நீர்மட்டம்
16 hour(s) ago
குன்னுார்:குன்னுார் ஆர்செடின் பகுதியில் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் ஆர்செடின் பகுதியில் கரடிகள் உணவை தேடி குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த சின்னப்பராஜ் என்பவரின் வீட்டின் கதவை கரடி உடைத்தது.இப்பகுதி மக்கள் கூறுகையில், 'இரவில் வந்த கரடி வீட்டு கதவை உடைத்து சமையலறையில் பொருட்களை சேதம் செய்தது. உள்ளே மற்றொரு அறையில் இருந்தவர்கள் அச்சத்தில் உறைந்தனர். இங்கு வேட்டை தடுப்பு காவலர் ஒருவரை வனத்துறையினர் அனுப்பி போட்டோ மட்டுமே எடுத்து சென்றனர்.இரவு நேரத்தில் தெரு விளக்குகளும் எரிவதில்லை. தெரு விளக்குகள் அமைத்து தர பேரூராட்சிக்கு வலியுறுத்தியும் நடவடிக்கைகள் இல்லை. தினமும் அனைவரும் அச்சத்துடன் உள்ளோம். கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுப்பதுடன், தெரு விளக்குகள் அமைக்க பேரூராட்சி முன்வர வேண்டும். தீர்வு காணாவிட்டால் வீடுகள் தோறும் கருப்பு கொடிகள் ஏற்றி போராட்டம் நடத்தப்படும்,' என்றனர்.
16 hour(s) ago