உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புனித அந்தோணியார் ஆலயத்தில் மறைக்கல்வி வகுப்பு துவங்கியது

புனித அந்தோணியார் ஆலயத்தில் மறைக்கல்வி வகுப்பு துவங்கியது

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆர்.சி., ஆலயத்தில்கடந்தவாரம் தேர்த் திருவிழாநடைபெற்றது. பள்ளிகள் திறந்ததை அடுத்து, ஆலயத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மறைக் கல்வி வகுப்பு துவங்கப்பட்டது. முன்னதாக கையில் கொடியை பிடித்த படி, மறைக்கல்வி மாணவ, மாணவியர், ஆலயத்துக்கு பாதிரியாரை திருப்பலியை நிறைவேற்ற அழைத்து வந்தனர். பாடல் திருப்பலி நிறைவடைந்த பின், பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ், மறைக்கல்வி வகுப்பு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதர் பிரான்சிஸ் சேவியர், மறைக்கல்வி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பங்கு மக்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை