உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது

கூடலுார்: தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய அளவிலான யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.தமிழக வனக்கோட்டங்களில், ஆண்டுக்கு ஒரு முறையும், முதுமலை உள்ளிட்ட புலிகள் காப்பகங்களில், ஒவ்வொறு ஆண்டும் பருவமழைக்கும் முந்தைய மற்றும் பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை தானியங்கி கேமராக்கள் பயன்படுத்தி புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது.அதேபோன்று தற்போது ஆண்டுக்கு ஒருமுறை, தென்னிந்திய அளவிலான யானைகள் கணக்கெடுக்கும் நடந்து வருகிறது.நடப்பாண்டு, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உட்பட்ட வனப்பகுதிகளில், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று துவங்கி மூன்று நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணிகள், நேர்கோடு முறையில், நீர்நிலைகள் கண்காணிப்பு மற்றும் கால் தடம், எச்சம் ஆகிய முறைகளில் நடக்கிறது. இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பக வன ஊழியர்களுக்கு தெப்பக்காடு யானைகள் முகாமிலும்; மசினகுடி கோட்ட வன ஊழியர்களுக்கு சீகூர் வனச்சரகர் அலுவலகத்திலும் நேற்று பயிற்சி முகாம் நடந்தது. அதில், வன ஊழியர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை