மேலும் செய்திகள்
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் மோதி விபத்து
2 hour(s) ago
ஊட்டி;ஊட்டியில் தொடரும் மழையால் மலர் கண்காட்சியில் சேதமான மலர்களை மாற்றி, புதிய மலர்களை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 126 வது மலர் கண்காட்சி கடந்த, 10 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நடப்பாண்டு மலர் கண்காட்சியில் சிறப்பம்சமாக பாரம்பரிய நீலகிரி மலை ரயில் இன்ஜின், டிஸ்னி வேல்டு ஆகியவை பல லட்சம் மலர்களால் வடிவமைக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில், ஊட்டியில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையால், பச்சை பசேலென காட்சி தந்த புல் மைதானங்கள் சேறும், சகதியாக மாறியுள்ளன. மேலும், மலர்களால் உருவாக்கப்பட்ட ரயில் இன்ஜின், டிஸ்னிவேல்டு ஆகியவற்றில் உள்ள மலர்கள் சேதமாகி உள்ளன. மேலும், சகதியான புல்வெளிகளில் சுற்றுலா பயணிகள் விழும் நிலையும் உள்ளது.இதை தொடர்ந்து, பூங்கா நிர்வாகம் சார்பில், வரும் நாட்களில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பூங்காவில் பல புதிய வடிவமைப்புகள் மலர்களால் அமைக்கப்பட்டுஉள்ளன. அதில், தர்பூசணி, காளான், கிடார், ஆக்டோபஸ் ஆகிய வடிவமைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. மேலும், ரயில் இன்ஜின், டிஸ்னி வேல்டு அமைப்புகளில், புதிய மலர்களை பொருத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.வரும், 20ம் தேதி மலர் கண்காட்சி நிறைவுவிழா நடக்கும் நிலையில், அதற்கான பணிகளில் பூங்கா நிர்வாகம் ஈடுபட்டுஉள்ளது.
2 hour(s) ago