உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் வந்த அமைச்சர் ஆக்கிரமிப்பு அகற்ற உறுதி

குன்னுார் வந்த அமைச்சர் ஆக்கிரமிப்பு அகற்ற உறுதி

குன்னுார்:நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் பயணியர் வருகை அதிகரித்துள்ளது. இதே போல் ஆளுங்கட்சியினரும், துறை அதிகாரிகளும் ஆய்வு என்ற பெயரில் நீலகிரிக்கு சுற்றுலா வருகின்றனர்.நேற்று குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் வந்த அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, அங்கிருந்த பக்தர்களுக்கு வாழை பழங்கள் வழங்கினார்.இதே போல, ஓராண்டிற்கு மேல் திருப்பணி நடந்து வரும் விநாயகர் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.விநாயகர் கோவில் திருமண மண்டப பராமரிப்பு இல்லாதது; ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து பக்தர்கள் புகார் தெரிவித்தனர். அப்போது, அமைச்சர் சேகர்பாபு, 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்து சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்