உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வளர்ப்பு எருமைகள் நடமாட்டம் போக்குவரத்துக்கு இடையூறு

வளர்ப்பு எருமைகள் நடமாட்டம் போக்குவரத்துக்கு இடையூறு

கோத்தகிரி:ஊட்டி - கோத்தகிரி சாலையில் அமைந்துள்ள கட்டபெட்டு பஜார், கக்குச்சி, நடுஹட்டி மற்றும் ஜெகதளா ஊராட்சிகளின் எல்லையாக அமைந்துள்ளது. இவ்வழித்தடத்தில் அமைந்துள்ள, 150க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு, கோத்தகிரி, குன்னுார் மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் இருந்து, அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தங்களது அன்றாட தேவைகளுக்காக கட்டபெட்டு பஜார் வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், நாள்தோறும் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக, வளர்ப்பு எருமைகளின் நடமாட்டம், பஜார் பகுதியில் அதிகரித்துள்ளது. கூட்டமாக வரும் காட்டெருமைகள், பெரும்பாலான நேரங்களில் சாலையில் படுத்து விடுவதால், வாகனங்கள் சென்றுவர இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் வாகனங்கள் உரசி செல்லும் போது, எருமைகளுக்கு காயம் ஏற்படுகிறது. தவிர, இருச்சக்கர வாகனங்களில் செல்வோர் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயமும் அதிகரித்துள்ளது.எனவே, போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக வளர்ப்பு எருமைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்