| ADDED : ஏப் 18, 2024 04:55 AM
பந்தலுார் : கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. கோடை வெயில் தண்ணீர் தாகத்தை தணிக்க குளிர்பானங்கள் மற்றும் பழங்களை பொதுமக்கள் நாடி செல்கின்றனர். அதில், ஏழை மக்கள் குழாய்களில் வரும் தண்ணீரை பருகி தாகத்தை தணித்து கொள்கின்றனர். இந்நிலையில், பந்தலுார் பகுதிக்கு வந்து செல்லும் பொதுமக்கள், தாகத்தை தணிக்கும் வகையில், நெல்லியாளம் நகராட்சி மூலம் இலவச தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.இங்கு இரண்டு கேன்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மற்றும் டம்ளர்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் தாகத்தை தணித்து செல்கின்றனர். நகராட்சியின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.